/உள்ளூர் செய்திகள்/தேனி/வீடுகளுக்குள் வரும் புழுக்களால் சுகாதாரக்கேடு; தெரு நாய்களால் அச்சம் குமுறும் தேனி அல்லிநகரம் நகராட்சி மிராண்டாலைன் பொதுமக்கள்வீடுகளுக்குள் வரும் புழுக்களால் சுகாதாரக்கேடு; தெரு நாய்களால் அச்சம் குமுறும் தேனி அல்லிநகரம் நகராட்சி மிராண்டாலைன் பொதுமக்கள்
வீடுகளுக்குள் வரும் புழுக்களால் சுகாதாரக்கேடு; தெரு நாய்களால் அச்சம் குமுறும் தேனி அல்லிநகரம் நகராட்சி மிராண்டாலைன் பொதுமக்கள்
வீடுகளுக்குள் வரும் புழுக்களால் சுகாதாரக்கேடு; தெரு நாய்களால் அச்சம் குமுறும் தேனி அல்லிநகரம் நகராட்சி மிராண்டாலைன் பொதுமக்கள்
வீடுகளுக்குள் வரும் புழுக்களால் சுகாதாரக்கேடு; தெரு நாய்களால் அச்சம் குமுறும் தேனி அல்லிநகரம் நகராட்சி மிராண்டாலைன் பொதுமக்கள்
ADDED : ஜன 31, 2024 06:40 AM

தேனி : 'சாக்கடை கட்டமைப்புகள் சீரமைக்கப்படாததால் சுகாதாரக்கேடு, அடிக்கடி சுற்றித்திரிந்து அச்சுறுத்தும் தெருநாய்களால் தொல்லை, கொசுக்கடியால் ஏற்படும் காய்ச்சல், வீடுகளுக்குள் புகும் சாக்கடை புழுக்கள்' என்பன உள்ளிட்ட பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி மிராண்டாலைன் பகுதியில் குடியிருப்போர் குமுறுகின்றனர்.
இப்பகுதியில் 1, 2 தெருக்கள், நேருஜி ரோடு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, வீரகாளியம்மன் கோயில் தெரு, ஸ்ரீராம்நகர், நியூ ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட 9 தெருக்கள் உள்ளன. இதில் மிரண்டாலைன் முதல் குறுக்குத் தெருவில் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் 550க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இத்தெருவில் நகராட்சி சார்பில் போதிய சுகாதார வசதிகள் மேம்படுத்தி தராததால் மக்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளாவதோடு, ஏராளமான வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.
பொது மக்களின் கருத்து
இப்பகுதியில் வசிக்கும் மீனாட்சி, சுந்தரி, புஷ்பம், பஞ்சவர்ணம் ஆகியோர் கூறியதாவது:
எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை கட்டமைப்புகளை துார்வாரக் கோரி நகராட்சியில் பலமுறை முறையிட்டு உள்ளோம். அதிகாரிகள் பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் பணிகள் ஏதும் நடைபெறுவது இல்லை. மழை நேரத்தில் சாக்கடைகளில் கழிவுநீர் நிரம்பி இத்தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்குகிறது. மற்ற நாட்களில் சாக்கடைகளில் உள்ள வால் புழுக்கள் வீட்டுக்குள் வருகின்றன. சில நேரங்களில் மட்டும் துார்வாரும் பணிகள் நடக்கின்றன. அவ்வாறு துார்வாரப்படும் சாக்கடை கசடுகளுடன் நிறைந்த கழிவுகளை தெருவில் அப்படியே வீட்டு செல்கின்றனர். சில நாட்களில் அந்த கழிவுகள் மீண்டும் சாக்கடைக்கு சென்று துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகுகின்றன. கொசுக்கடியால் பலர் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்படுகிறது. பலர் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தெருநாய்களால் தொல்லை
வீடுகளில் குப்பை வாங்குவதற்கு பணியாளர்கள் வருவது இல்லை. மற்ற தெருக்களில் இருந்து வரும் சிலர் தெருவில் மேற்கு நுழை வாயிலில் அதிகாலை, இரவு நேரங்களில் குப்பையை கொட்டி செல்கின்றனர். இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. அந்த நாய்கள் குப்பையை தெருவில் வாரிவிடுகின்றன. நாய்கள் தெருவில் நடந்து செல்வோரையும், டூவீலர்களில் செல்வோரையும் விரட்டியும் செல்வதால் இரவில் டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுவது தொடர்கதையாக உள்ளது.நகராட்சி அதிகாரிகள் மிரண்டாலைன் முதல் தெருவில் சாக்கடையை துார்வாரவும், நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தவும், மாதமிருமுறை கொசுமருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.