/உள்ளூர் செய்திகள்/தேனி/விவசாய கிணறுகளில் தரை தளத்திற்கு உயர்ந்த நீர்மட்டம்விவசாய கிணறுகளில் தரை தளத்திற்கு உயர்ந்த நீர்மட்டம்
விவசாய கிணறுகளில் தரை தளத்திற்கு உயர்ந்த நீர்மட்டம்
விவசாய கிணறுகளில் தரை தளத்திற்கு உயர்ந்த நீர்மட்டம்
விவசாய கிணறுகளில் தரை தளத்திற்கு உயர்ந்த நீர்மட்டம்
ADDED : ஜன 11, 2024 04:52 AM

ஆண்டிபட்டி : குன்னூர் அருகே ஆற்றில் தொடர்ச்சியான நீர் வரத்துடன் வைகை அணை நீர்த்தேக்கம் குன்னூர் வரை விரிந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் தரைத்தளம் வரை உயர்ந்துள்ளது.
அம்மச்சியாபுரம், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி உட்பட பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரைப்பகுதியிலும், வைகை அணை நீர்த்தேக்கத்தை ஒட்டியும் உள்ளன. இப்பகுதியில் கிணறுகள், போர்வெல்களில் கிடைக்கும் நீரால் ஆண்டு முழுவதும் விவசாயம் தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக ஆற்றில் தொடர்ச்சியான நீர்வரத்து உள்ளது. வைகை அணை நீர் தேக்கமும் கடந்த மூன்று மாதமாக குன்னூர், அரப்படித்தேவன்பட்டி வரை விரிவடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் தரைத்தளம் வரை உயர்ந்து குறையாமல் நீடிக்கிறது. விவசாயிகள் நெல், வாழை, காய்கறிகள் சாகுபடி செய்துள்ளனர்.