Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/செய்யாத தவறுக்கு சிறை தண்டனை: மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்

செய்யாத தவறுக்கு சிறை தண்டனை: மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்

செய்யாத தவறுக்கு சிறை தண்டனை: மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்

செய்யாத தவறுக்கு சிறை தண்டனை: மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்

ADDED : ஜூன் 27, 2024 06:29 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன் : செய்யாத தவறுக்காக சிறைத் தண்டனை அனுபவித்த பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், அதற்கு காரணமாக இருந்த பொறியாளரின் மன்னிப்பை நிராகரித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள தபால் ஆபீஸ்கள் கடந்த 1999 முதல் 'புஜிட்சு' நிறுவனம் தயாரித்த மென்பொருளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வரவு - செலவு கணக்கு, பொருட்கள் இருப்பு விபரம் உள்ளிட்டவை இந்த தொழில்நுட்ப முறையிலேயே கையாளப்பட்டு வந்தன.

இந்நிலையில், பிரிட்டனின் சுர்ரே பகுதியில் உள்ள வெஸ்ட் பைப்லிட் கிராமத்தில் செயல்படும் தபால் ஆபிஸில் மேலாளராக வேலை செய்த இந்திய வம்சாவளியான சீமா மிஸ்ரா என்பவர், அங்கிருந்த 70 ஆயிரம் பவுண்டுகள், இந்திய மதிப்பில் 74 லட்சம் ரூபாயை திருடியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் 'புஜிட்சு' நிறுவன பொறியாளர் கரேத் ஜென்கின்ஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமாவுக்கு நான்கரை மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது அவர் தன் இரண்டாவது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரான்ஸ்பீல்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தபால் நிலையங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டு, ஏராளமானோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புஜிட்சு நிறுவன சாப்ட்வேரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே தபால் நிலையங்களில் இருந்த நிதியில் முரண்பாடு ஏற்பட்டது கடந்த 2021ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சாட்சியம் அளித்த கரேத் ஜென்கின்ஸ், 'சீமா சிறை சென்ற போது கர்ப்பிணியாக இருந்தது எனக்கு தெரியாது. பல ஆண்டுகளுக்கு பிறகுதான் அது எனக்கு தெரிய வந்தது. சீமா மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என சமீபத்தில் கூறினார்.

இதை நிராகரித்துள்ள சீமா, 'இந்த மன்னிப்பை எவ்வாறு நான் ஏற்க முடியும்? என் 10 வயது மகன் பிறந்த நாளில், அவன் அம்மாவை சிறைக்கு அனுப்பியதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் சிறையில் இருக்கும் போது என் வயிற்றில் இருந்து கஷ்டப்பட்ட இளைய மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவரின் மன்னிப்புகளை ஏற்கவில்லை' என, கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us