/உள்ளூர் செய்திகள்/தேனி/தொடர் மழை எதிரொலி: செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்; தட்டுப்பாட்டால் விலை உயர்வுதொடர் மழை எதிரொலி: செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்; தட்டுப்பாட்டால் விலை உயர்வு
தொடர் மழை எதிரொலி: செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்; தட்டுப்பாட்டால் விலை உயர்வு
தொடர் மழை எதிரொலி: செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்; தட்டுப்பாட்டால் விலை உயர்வு
தொடர் மழை எதிரொலி: செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்; தட்டுப்பாட்டால் விலை உயர்வு
ADDED : ஜன 11, 2024 03:57 AM
கம்பம் : தொடர் மழை காரணமாக கம்பம் பகுதி செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக விலை சற்று உயர துவங்கியுள்ளது.
கம்பத்தில் 35 செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. செங்கல் உற்பத்திக்கு தேவையான மண், களிமண், செம்மண் தட்டுப்பாடு உள்ளது. போடி அருகில் இருந்து மண் வருவதால் விலை அதிகமாகிறது. தொழிலாளர் கூலி, விறகு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளது . ஆயிரம் செங்கல் விலை ரூ.6 ஆயிரத்திற்கு மேல் கிடைத்தால் தான் கட்டுபடியாகும். ஆனால் கடந்த பல மாதங்களாக ரூ.5 ஆயிரத்து 500 ற்கு விற்றது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கடந்த 20 நாட்களாக செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கம்பம் செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், தொடர் மழை காரணமாக கடந்த 20 நாட்களாக சூளைகளில் உற்பத்தியை நிறுத்தி விட்டோம். விற்பனையும் குறைவாகத் தான் இருந்தது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை.
தட்டுப்பாடு காரணமாக தற்போது விலை சற்று உயரத் துவங்கி உள்ளது . ஆயிரம் கல் ரூ 5500 ல் இருந்து ரூ.5800 வரை விலை உயர்ந்துள்ளது. மழையும் குறைந்துள்ளதால் நிலைமையை பார்த்து மீண்டும் உற்பத்தியை துவக்கலாம் என்று உள்ளோம் என்றார்.