தீர்வு காணும் பணி தீவிரம்: மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு பற்றி மத்திய அமைச்சர் விளக்கம்
தீர்வு காணும் பணி தீவிரம்: மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு பற்றி மத்திய அமைச்சர் விளக்கம்
தீர்வு காணும் பணி தீவிரம்: மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு பற்றி மத்திய அமைச்சர் விளக்கம்
ADDED : ஜூலை 19, 2024 03:19 PM

புதுடில்லி: மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயலிழந்துவிட்டதால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, ஆன்லைன் வர்த்தக சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்னையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் ' 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் எரர்' ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டது. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள மைக்ரோசாப்ட், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், ''மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. என்ன பிரச்னை என்பது கண்டறியப்பட்டுள்ளது; மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. ரயில்வே சேவைகளிலும் எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.