/உள்ளூர் செய்திகள்/தேனி/முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
ADDED : பிப் 25, 2024 04:08 AM

தேனி : தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அ.தி.மு.க.,வினர், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்லம் அணியினர், அ.ம.மு.க.,வினர் சார்பில் பல இடங்களில் கொண்டாடி, இனிப்பு வழங்கப்பட்டது.
தேனி நேருசிலை அருகே அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். நகர துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன், ஐ.டி., பிரிவு மதுரை மண்டல துணைத்தலைவர் பாலசந்தர், மாணவரணி மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பில் அல்லிநகரம் எம்.ஜி.ஆர்., திடலில் நடந்த விழாவில் தேனி வடக்கு நகர செயலாளர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் மயில்வேல் முன்னிலை வகித்தார்.அவைத்தலைவர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி:- அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் ஜெ., படத்திற்கு மலர் தூவியும், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அமரேசன், பாக்கியராஜ், நகர செயலாளர் அருண்மதிகணேசன், பொதுக்குழு உறுப்பினர் மைனர்பாலு, மாவட்ட பிரதிநிதி கவிராஜன் கலந்து கொண்டனர். கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஒன்றிய, நகர நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
ஆண்டிபட்டி 3வது வார்டு பாப்பம்மாள்புரம், 4வது வார்டு பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நடந்த அன்னதான நிகழ்ச்சிகளை அ.தி.மு.க.,மாவட்டச்செயலாளர் முருக்கோடை ராமர் துவக்கி வைத்தார். ஜெ.,பிறந்தநாளை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் மாவட்ட செயலாளர் வழங்கினார்.
ஆண்டிபட்டியில் அ.ம.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். தொகுதி பொறுப்பாளர் அய்யணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்: பழைய பஸ் ஸ்டாண்ட்டில் ஜெ., படத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இணைச் செயலாளர் முத்துலட்சுமி, வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தவமணி, ஒன்றிய செயலாளர் ராஜகுரு, நகர செயலாளர் பழனியப்பன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.பி., அலுவலகம் முன் ஜெ., படத்திற்கு, ரவீந்திரநாத் எம்.பி., மாலை அணிவித்தார். மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி ஆவின் முன்னாள் தலைவர் ஓ.ராஜா, அமைப்பு செயலாளர் மஞ்சுளா, நகர செயலாளர் அப்துல்சமது, துணை செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், கவுன்சிலர் குருசாமி, நிர்வாகிகள் அன்பு, ரெங்கராஜ், காமராஜ், வெள்ளைச்சாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். காளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: ஓ.பி.எஸ்., அணி சார்பில் நகர செயலாளர் பழனிராஜ் தலைமையில் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். போடி நகர அவைத் தலைவர் மணிகண்டன், மத்திய ஒன்றிய செயலாளர் சுந்தரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் குருமணி உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
போடி அ.தி.மு.க., சார்பில் வடக்கு நகர செயலாளர் சேதுராம், தெற்கு நகர செயலாளர் மாரியப்பன் முன்னிலையில் ஜெ., உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தீர்த்த தொட்டியில் அ.தி.மு.க., அமைப்பு சாரா அணி சார்பில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சி மணி தலைமையில் கொண்டாடப்பட்டது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இனிப்புகள், வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் முத்துராஜ், ராஜ்குமார் உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூடலுார்: கூடலுார் கன்னிகாளிபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் சிறுவர், சிறுமிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகரச் செயலாளர் அருண்குமார் பரிசு வழங்கினார்.
பொங்கல் வழங்கப்பட்டது. அவைத்தலைவர் நடராஜன், நகர துணை செயலாளர் பாலைராஜா, பொருளாளர் லட்சம், வார்டு செயலாளர் வெங்கடேஸ்வரன், அம்மா பேரவை நகர செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.