ADDED : செப் 13, 2025 04:24 AM

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வியியல் துறையின் இளங்கலை மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்ட குறித்து விதிமுறைகள், பயிற்சி நுணுக்கங்கள் குறித்த ஒரு நாள் கலந்துரையாடல், பயிற்சி நடந்தது.
பயிற்சியை கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். வீரபாண்டி அரசுக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரசன்னகுமார் கால்பந்து விளையாட்டு வரலாறு, சிறப்புகள், நுணுக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
பின் மைதானத்தில் கால்பந்து விளையாட்டு நுணுக்கங்கள், நேரடி கற்பித்தல் திறன் குறித்து பயிற்சி வழங்கினார். துறையின் உதவி பேராசிரியர்கள் குருகுலஹேமா, மகேஸ்வரி உடனிருந்தனர்.