/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் ஸ்டேஷன் முன் குழந்தையுடன் பெண் தர்ணா போலீஸ் ஸ்டேஷன் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
போலீஸ் ஸ்டேஷன் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
போலீஸ் ஸ்டேஷன் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
போலீஸ் ஸ்டேஷன் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
ADDED : செப் 13, 2025 04:24 AM
சின்னமனூர்: சின்னமனூர் போலீஸ் ஸ்டேசஷனில் நேற்று இளம் பெண் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
சின்னமனூர் அருகே கன்னியம்பட்டியில் வசிப்பவர் பார்த்திபன் 24, இவரது மனைவி ரோஸ்மிதா 22, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செப். 8 ல் பார்த்திபன் பாட்டி இறந்துள்ளார். துக்க வீட்டில் பார்த்திபனுக்கும், அருகில் குடியிருக்கும் கிஷோர் 23 என்பவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கிஷோர் தாக்கியதில் பார்த்திபன் பலத்த காயமடைந்துள்ளார்.
சிகிச்சைக்கு சின்னமனுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சின்னமனூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பார்த்திபனின் மனைவி ரோஸ்மிதா தனது குழந்தையுடன் சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். போலிசார் அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.
இன்ஸ்பெக்டர் பாலாண்டி கூறுகையில் , 'சம்பவம் செப். 8 ல் நடந்துள்ளது. மறுநாள் புகார் அளிக்க வந்தனர். வழக்கு பதிவு செய்து கிஷோரை தேடினோம்.
அவர் தலைமறைவாகினார். தற்போது கோர்டடில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் கைது செய்து விடுவோம்,' என்றார்.