ஜன., 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஜன., 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஜன., 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 13, 2024 04:31 AM
தேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜனவரி 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக வழங்கி தீர்வு பெறலாம்.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உழவர் நலத்துறை திட்டங்கள், குறைகள் குறித்து தெரிவிக்கலாம். ெபறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு தனிகவனம் செலுத்தி, குறிப்பிட்ட நாட்களில் உரிய தீர்வு காணப்படும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.