நவம்பர் மாதத்துக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை
நவம்பர் மாதத்துக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை
நவம்பர் மாதத்துக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

புதுடில்லி: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் கையெழுத்தாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரை 5 சுற்று பேச்சுகள் நடந்த நிலையில் முடிவு எடுக்கப்படவில்லை. பால் பண்ணைத் துறைதான் இந்தியாவுடனான பேச்சில் இழுபறியாக இருக்கிறது. வேளாண்மை, கால்நடைத் துறைகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதில் இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.
இதனிடையே, இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 6வது சுற்று பேச்சுவார்த்தை தள்ளி போயுள்ளது.
இந்நிலையில், டில்லியில் வர்த்தக சேம்பர் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இரு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் புவிசார் அரசியல் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்தும் சரியாக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புகிறேன். இரு நாட்டு தலைவர்களும் பிப்ரவரியில் முடிவு செய்தபடி இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னர் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
உலகின் பல நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், பிரிட்டன், மற்றும் ந ான்கு ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. அமெரிக்கா உடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.