/உள்ளூர் செய்திகள்/தேனி/மானாவாரியில் காய்த்து குலுங்கும் துவரை செடிகள்மானாவாரியில் காய்த்து குலுங்கும் துவரை செடிகள்
மானாவாரியில் காய்த்து குலுங்கும் துவரை செடிகள்
மானாவாரியில் காய்த்து குலுங்கும் துவரை செடிகள்
மானாவாரியில் காய்த்து குலுங்கும் துவரை செடிகள்
ADDED : ஜன 03, 2024 07:00 AM

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மானாவாரி நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் வளர்ந்து நிற்கும் துவரை செடிகள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைப்பு செய்வர். வேலப்பர் கோயில் மலை அடிவாரம், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராயவேலூர், அழகாபுரி, கணேசபுரம், சித்தார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விதைப்பில் இருந்து அறுவடை வரை துவரை சாகுபடிக்கு 8 முதல் 10 மாதம் வரை ஆகும் என்பதால் விவசாயிகள் பலரும் இதன் சாகுபடியை தவிர்த்து விடுவர். கடந்த ஜூன், ஜூலையில் விதைப்பு செய்யப்பட்ட செடிகளில் அதிக காய்கள் பிடித்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் துவரை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாமதமாக விதைத்த நிலங்களில் தற்போது பூக்கள் எடுத்துள்ளது.
இன்னும் சில மாதம் தொடரும் பனி துவரை செடிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.