/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு மருத்துவமனையில் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்' கம்பத்தில் நோயாளிகள் பரிதவிப்புஅரசு மருத்துவமனையில் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்' கம்பத்தில் நோயாளிகள் பரிதவிப்பு
அரசு மருத்துவமனையில் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்' கம்பத்தில் நோயாளிகள் பரிதவிப்பு
அரசு மருத்துவமனையில் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்' கம்பத்தில் நோயாளிகள் பரிதவிப்பு
அரசு மருத்துவமனையில் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்' கம்பத்தில் நோயாளிகள் பரிதவிப்பு
ADDED : ஜன 28, 2024 04:34 AM
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனையில் விடுமுறை நாளில் சிகிச்சையளிக்க டாக்டர்கள் இல்லாததால் நோயாகளிகள் தவிக்கின்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு காலையில் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சையளிக்கின்றனர். அதன்பின் பிற்பகல், மாலை, இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பது இல்லை. நர்சுகள் தான் இருப்பார்கள்.
அவர்கள் தற்காலிகமாக மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக இரவில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
மேலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. அதிலும் தொடர் விடுமுறை நாட்கள் என்றால், அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளியின் நிலை பரிதாபமாக இருக்கும்.
பொங்கல் விடுமுறை நாளின் போது முதியவர் சிறுநீரக பிரச்னையில் மயக்க நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர் யாரும் பணியில் இல்லை. அங்கிருந்த நர்சு சம்பந்தமில்லாத மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டார்.
வேதனையில் துடித்த முதியவர் வேறு வழியின்றி அருகில் கிராமத்தில் ஆர்.எம்.பி. படித்தவரை அழைத்து வந்து, அவர் சிறுநீர் வெளியேறுவதற்கு டியூப் பொருத்தி உயிரை காப்பாற்றியுள்ளார்.
டாக்டர் பணியில் இல்லாததது பற்றி மருத்துவ அலுவலர் கண்டு கொள்வதில்லை.
எனவே, நலப்பணிகள் இணை இயக்குநர் இரவிலும், விடுமுறை நாட்களிலும் அரசு மருத்துவமனையில் திடீர் விசிட் செய்தால், கம்பம் அரசு மருத்துவமனையின் உண்மையான நிலை என்ன என்பதும், பொதுமக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதும் தெரியும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளனர்.