ADDED : பிப் 12, 2024 05:54 AM
தேனி: நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்தேச மார்க்சிய கழகம் சார்பில் போலீசில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற அமைப்பு நிர்வாகி சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் 6 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.