பா.ஜ., வென்ற இடங்களை கூட தாண்டாத ஒட்டுமொத்த 'இண்டியா' கூட்டணி
பா.ஜ., வென்ற இடங்களை கூட தாண்டாத ஒட்டுமொத்த 'இண்டியா' கூட்டணி
பா.ஜ., வென்ற இடங்களை கூட தாண்டாத ஒட்டுமொத்த 'இண்டியா' கூட்டணி
ADDED : ஜூன் 05, 2024 11:49 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளில் பா.ஜ., தனியாகவே 240 இடங்களில் வென்ற நிலையில், அந்த எண்ணிக்கையை கூட பெற முடியாமல் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி குறைவான இடங்களிலேயே (232) வெற்றி பெற்றுள்ளன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகள், நேற்று (ஜூன் 4) வெளியானது. இதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை விட கூடுதலாக பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இதில் பா.ஜ., மட்டும் தனியாக 240 இடங்களில் வென்றுள்ளது. கடந்த இரு லோக்சபா தேர்தலிலும் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்த பா.ஜ., இந்தமுறை பெரும்பான்மை பெறவில்லை.
இந்த கூட்டணியை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தது. இக்கூட்டணி ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளில் வென்றுள்ளது. இது பா.ஜ., மட்டும் பெற்றிருந்த இடங்களை விட குறைவு.