/உள்ளூர் செய்திகள்/தேனி/ கொப்பரை தேங்காய் கிலோ ரூ.170க்கு விற்பனை கொப்பரை தேங்காய் கிலோ ரூ.170க்கு விற்பனை
கொப்பரை தேங்காய் கிலோ ரூ.170க்கு விற்பனை
கொப்பரை தேங்காய் கிலோ ரூ.170க்கு விற்பனை
கொப்பரை தேங்காய் கிலோ ரூ.170க்கு விற்பனை
ADDED : மார் 28, 2025 05:51 AM
தேனி; தேனி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.170க்கு விற்பனையானது.
தேனி பெரியகுளம் ரோட்டில் சுக்குவாடன்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.
இங்கு வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய், கொப்பரை உள்ளிட்ட வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. இங்கு மார்ச் 26ல் கொப்பரை தேங்காய் 804.20 கிலோ விற்பனைக்கு வந்தது.
விற்பனைகுழு செயலாளர் ராஜா தலைமையில் ஏலம் நடந்தது. இதில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 170க்கு விற்பனையானது.
குறைந்த பட்சம் ரூ. 120க்கும், சராசரியாக ரூ.154 என விற்பனையானது. கொப்பரை 804 கிலோ ரூ.1.23 லட்சத்திற்கு விற்பனையானது.