/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு
தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு
தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு
தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு
ADDED : மார் 28, 2025 05:51 AM
தேனி; மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வரும் 3ம் ஆண்டு புத்தக திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு செய்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா மார்ச் 23ல் துவங்கியது. தினமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் பேச்சாளர்கள் இடம் பெறும் இலக்கிய அரங்கம், பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடந்து வருகிறது. புத்தக திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்று வருகின்றனர். விரும்பிய புத்தகங்களை ஆவர்முடன் வாங்குகின்றனர். புத்தக திருவிழா மார்ச் 30ல் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் புத்தக திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புத்தக திருவிழாவை ஏப்.,1 வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.