/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறு ஊராட்சியில் பிப்.22ல் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் உத்தரவுமூணாறு ஊராட்சியில் பிப்.22ல் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் உத்தரவு
மூணாறு ஊராட்சியில் பிப்.22ல் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் உத்தரவு
மூணாறு ஊராட்சியில் பிப்.22ல் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் உத்தரவு
மூணாறு ஊராட்சியில் பிப்.22ல் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் உத்தரவு
ADDED : ஜன 28, 2024 04:49 AM
மூணாறு, : மூணாறு ஊராட்சியில் இரண்டு வார்டுகளில் இடைதேர்தல் பிப்.22ல் நடக்கிறது.
மூணாறு ஊராட்சியில் 21 வார்டுகளில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 11, இடதுசாரி கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஊராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.
கட்சி தாவல்: 11, 18 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த காங்., உறுப்பினர்கள் 2021 டிசம்பரில் கட்சியில் இருந்து விலகி இடதுசாரி கூட்டணியில் இணைந்ததால் காங்கிரஸ் நிர்வாகம் கவிழ்ந்தது. கட்சி தாவிய இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.
கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி இருவரையும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்தும், இருவரும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் தேர்தல் கமிஷன் அக்.12ல் உத்தரவிட்டது. இரண்டு வார்டுகளிலும் இடைத் தேர்தலுக்கு மாநில தேர்தல் கமிஷன் நவ.15ல் உத்தரவிட்டது.
ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிராக இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தலை ஒத்தி வைத்து தேர்தல் கமிஷன் மறு உத்தரவிட்டது.
இந்நிலையில் தேர்தல் கமிஷன் உத்தரவையடுத்து இருவருடைய மனுக்களையும் தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் டிசம்பரில் உத்தரவிட்டதால் இரண்டு வார்டுகளிலும் பிப்.22ல் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.