Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜன 01, 2024 06:18 AM


Google News
தேனி: மாநிலத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறையால்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி, கல்லுாரி, வணிக வளாகங்களுக்கு அரசு சார்பில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் தலா 3 பள்ளி, கல்லுாரி, வணிக வளாகங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளன. விண்ணப்ப படிவங்களை https://theni.nic.in என்ற கலெக்டர் அலுவலக இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து ஜன.,5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us