/உள்ளூர் செய்திகள்/தேனி/மாட்டுபட்டி அணைகட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனைமாட்டுபட்டி அணைகட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனை
மாட்டுபட்டி அணைகட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனை
மாட்டுபட்டி அணைகட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனை
மாட்டுபட்டி அணைகட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனை
ADDED : ஜன 28, 2024 04:48 AM

மூணாறு : மாட்டுபட்டி அணைகட்டின் மேல் பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்க மின்வாரியத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
மூணாறு அருகே மின்வாரியத்தினரின் பராமரிப்பில் மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். இந்த அணை 1953ல் பயன்பாட்டிற்கு வந்தது. 237.74 மீட்டர் நீளம் கொண்ட அணைக்கட்டின் வழியாக குண்டளை, எல்லப்பட்டி, செண்டுவாரை உள்பட பல்வேறு எஸ்டேட்டுகள், டாப் ஸ்டேஷன் மற்றும் வட்டவடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும்.
அதனால் அணைக்கட்டின் வழியாக சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்பட தினமும் நூற்றுக் கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் மரத்தடிகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் செல்கின்றன. அதனால் அணை பலம் இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் அணைக்கட்டின் நுழைவு பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட செக்யூரிட்டி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை அணை பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது வாகனங்களின் அதிர்வால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாக தெரியவந்தது. அதனால் அணை கட்டு வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மாறாக அணைக்கட்டு அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையையொட்டி உள்ள ரோட்டில் வாகனங்களை திருப்பி விடும் நோக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.