/உள்ளூர் செய்திகள்/தேனி/பகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்குபகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்கு
பகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்கு
பகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்கு
பகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்கு
ADDED : ஜன 06, 2024 06:51 AM

கூடலுார்: கூடலுார் புறவழிச் சாலை - மாநில நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இரவு நேரங்களில் எரியாமல் இருளில் மூழ்கி வருவது தொடர்ந்துள்ளது.
தற்போது சபரிமலை சீசனால் பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே வருகின்றன. முக்கிய ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இருளில் மூழ்கி இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக எரியாமல் இருளில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் நேற்று பகலில் எரிந்ததால் மக்கள் புலம்பினர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து இரவு நேரத்தில் மட்டுமே எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.