/உள்ளூர் செய்திகள்/தேனி/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசாரம் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசாரம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசாரம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசாரம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூலை 11, 2024 05:52 AM

கம்பம்: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் சமூக, பொருளாதார மாற்றங்களை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. நேற்று சங்கராபுரத்தில் குடும்ப நலத்துறை சார்பில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை இயக்குநர் அன்புச் செழியன் முன்னிலை வகித்தார். இந்த வாகனம் ஒவ்வொரு நாளும் ஒரு வட்டாரத்திற்கு செல்லும். மக்கள் தொகை பெருக்கம், அதனால் ஏற்படும் விளைவுகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலிகள் ஒளிபரப்பரப்படும். இந்தாண்டின் உலக மக்கள் தொகை நாள் பொருளாக, டீன் ஏஜ் திருமணங்களை தவிர்த்தல், தேவையற்ற கர்ப்பங்களை தவிர்த்தல், டீன் ஏஜ் கர்ப்பங்களை தள்ளி போடுதல் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியதாகும். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் பிரசவத்திற்கு அனுமதிகப்பட்டால் உடனடியாக சமூக நலத்துறைக்கு தகவல் தர வேண்டும். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.