/உள்ளூர் செய்திகள்/தேனி/ உருவபொம்மை எரிக்க முயன்ற 29 காங்கிரசார் கைது உருவபொம்மை எரிக்க முயன்ற 29 காங்கிரசார் கைது
உருவபொம்மை எரிக்க முயன்ற 29 காங்கிரசார் கைது
உருவபொம்மை எரிக்க முயன்ற 29 காங்கிரசார் கைது
உருவபொம்மை எரிக்க முயன்ற 29 காங்கிரசார் கைது
ADDED : ஜூலை 11, 2024 05:53 AM

தேனி: காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து பேசிய பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உருவபொம்மை எரிக்க முயன்ற 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர் என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. காங்., கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி,உருவபொம்மையை கைப்பற்றினர். பின் சிறிது எரித்த நிலையில் உள்ள அண்ணாமலை 4 போட்டோக்களை போலீசார் கைப்பற்றினர். தேனி நகரத் தலைவர் கோபிநாத், மாவட்டச் செயலாளர் அபுதாஹிர், மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மாவட்டச் செயலாளர் சம்சுதீன், நகரத் துணைத் தலைவர் மீரான்தாஜூதின், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, போடி வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர், கம்பம் வட்டாரத் தலைவர் ராஜாமுகமது, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகாமசுந்தரி, சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 பெண்கள் உட்பட 29 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.
போடி: காங்., மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வினோத் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முத்துச் செல்வம் உட்பட 5 பேர் சேர்ந்து அண்ணாமலை உருவ படத்தை எரித்தனர். போடி டவுன் போலீசார் வினோத்செல்வம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.