/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் குவிண்டால் ரூ.2670 வரை விற்பனை மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் குவிண்டால் ரூ.2670 வரை விற்பனை
மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் குவிண்டால் ரூ.2670 வரை விற்பனை
மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் குவிண்டால் ரூ.2670 வரை விற்பனை
மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் குவிண்டால் ரூ.2670 வரை விற்பனை
ADDED : ஜூலை 11, 2024 05:51 AM
தேனி: தேனி மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. மத்திய அரசின் மக்காச்சோள தீவிர சாகுபடி திட்டத்தில் மேலும் 615 எக்டேர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி வேளாண், தோட்டக்கலை பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமாகும். நீர் வளமிக்க மாவட்டம் என்பதால் ஆண்டு முழுவதும் மக்காசோளம் சாகுபடி செய்கின்றனர்.
மேலும் குறைந்த செலவில் அதிக லாபம் என்பதால் மக்காச்சோளத்தை விரும்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகம். மானாவரியில் மக்காசோளம் சாகுபடிக்கு ஏற்ற நிலம் என்பதால் பலரும் இதனை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டிற்கு 8035 எக்டேர் சாகுபடி செய்கின்றனர்.
கடந்த அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ராபி பருவத்தில் 4465 எக்டேர் சாகுபடி செய்தனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 6 ஆயிரம் எக்டேர் சாகுபடியாகிறது.
வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடி தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் மத்திய அரசின் தீவிர மக்காச்சோள சாகுபடி திட்டத்தில் 615 எக்டேர் பரப்பு கூடுதலாக சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டது. நோய் தாக்குதல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வேப்ப எண்ணெய், வரப்பு பயிர்களுக்கான விதை, இனக்கவர்ச்சி பொறி, விதை நேர்த்திக்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
தேனி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் மக்காச்சோளம் உணவு , தீவனங்களுக்காக அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு குவிண்டால் ரூ. 2250 முதல் ரூ.2350 வரை விற்பனையானது. தற்போது மக்காச்சோளத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.300 வரை அதிகரித்து ரூ. 2670 வரை விற்பனையாகிறது.