/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:00 AM

ம்பம்:தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின், தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ், பிரசவ வார்டுக்கு மூன்று மாடி புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
கடந்த 2022 ஜனவரியில் துவங்கிய இந்தப் பணியை ஓராண்டில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் நிறைவு பெறவில்லை.
இந்த கட்டடத்தின் போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று, நேற்று முன் தினம் காலை மூன்று தொழிலாளர்கள் சிமென்ட் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது முதல் தளத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்த பில்லர்கள் மற்றும் சிலாப்புகள் திடீரென இடிந்து, பூச்சு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.
மதுரை, ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த நம்பிராஜன், 40, அதே இடத்தில் பலியானார். உடன் வேலை செய்து கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த செல்வம், 32, முனிஷ் என்ற சதீஷ் குமார், 42, பலத்த காயமடைந்தனர்.
கம்பம் தீயணைப்பு துறை பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.