Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவருக்கு ஆயுள் * தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவருக்கு ஆயுள் * தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவருக்கு ஆயுள் * தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவருக்கு ஆயுள் * தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : ஜூலை 10, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
தேனி:தேனியில் மனைவியை சுவரில் தலையை மோதி கொலை செய்து, கழிப்பறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய டூவீலர் மெக்கானிக் கேப்டன் பிரபாகரனுக்கு 33, ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர் சூரியம்பட்டி தெற்குத்தெரு விவசாயி முருகேசன் மகன் கோவிந்தராஜ். இவர் 2020 அக்., 5ல் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரில் எனது சகோதரி கவிதா 31, 2011ல் சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு தேனி மாவட்டம், காமயக்கவுண்டன்பட்டி கேப்டன் பிரபாகரன் 33, பணிபுரிந்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்தனர். பின் காமயக்கவுண்டன்பட்டி வந்து மந்தையம்மன் கோயில் தெருவில் 2 மகன்களுடன் வசித்தனர். கேப்டன் பிரபாகரன் கம்பத்தில் டூவீலர் விற்பனை நிறுவனத்தின் மெக்கானிக் ஆக பணிபுரிந்தார். தங்கை திராட்சை தோட்டத்திற்கு தினக்கூலி வேலைக்கு சென்றார்.

சம்பாதிக்கும் பணத்தை செலவழித்து விட்டு மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி தன்னை கணவர் தாக்கி சித்ரவதை செய்வதாக அலைபேசியில் கவிதா தெரிவித்தார். நான் ஒரு முறை சகோதரி வீட்டிற்கு சென்று கணவரை கண்டித்து சென்றேன். பின் அலைபேசியில் 2020 அக்., 4ல் என்னிடம் பேசிய கேப்டன் பிரபாகரன், கழிப்பறையில் வழுக்கி விழுந்து பின்பக்க தலையில் காயம்பட்டு சகோதரி இறந்துவிட்டார்' என்றார்.

நாங்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்த கவிதா உடலை பார்த்தோம். அதில் தலை, கண்களில் காயம் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், கவிதாவை தலையில் தாக்கி கொலை செய்தது' உறுதியானது. இதனால் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கேப்டன் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக குருவராஜ் ஆஜரானார். கேப்டன் பிரபாகரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us