/உள்ளூர் செய்திகள்/தேனி/ காய்கறி பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் காய்கறி பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்
காய்கறி பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்
காய்கறி பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்
காய்கறி பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்
ADDED : ஜூலை 10, 2024 04:09 AM
தேனி, : மாவட்டத்தில் கொடிவகை காய்கறி பயிரிட பந்தல் அமைக்க எக்டேருக்கு ரூ.3லட்சம் மானியம் 20 எக்டேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மாவட்டத்தில் கொடிவகை காய்கறிகளான கோவைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவை பிறமாவட்டங்கள், கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பந்தல் காய்கறிகள் சாகுபடிக்கு கல்துாண் பந்தல் அமைக்க எக்டேருக்கு ரூ.3லட்சம் மானியம் வழங்கப்படும். மாவட்டத்தில் 20 எக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபட சான்றுகளுடன் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.