Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண்கள் கூட்டமைப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெண்கள் கூட்டமைப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெண்கள் கூட்டமைப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெண்கள் கூட்டமைப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : ஜூலை 29, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வட்டார களஞ்சியம் பெண்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்,விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஆண்டிபட்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி சுமந்தும், சேமிப்பின் அவசியம், சமூக விழிப்புணர்வு உட்பட வாசகங்கள் கொண்ட பதாதைகளைஏந்திச் சென்றனர். பின்திருமண மண்டபத்தில்நடந்தபொதுக்குழு கூட்டத்தில் ஆண்டிபட்டிஅனைத்துமகளிர் இன்ஸ்பெக்டர் நாகராணி, களஞ்சியம் வட்டாரத் தலைவி முத்துமாரி, செயற்குழு உறுப்பினர்கள் சுகந்தி, சர்வேஸ்வரி, கீதா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். இந்தியன் வங்கி உதவி மேலாளர் திருப்பதி, உதவி வேளாண் அலுவலர் குமரேசன் ஆகியோர் பேசினர். களஞ்சியம் செயல்பாடுகள் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளர் டயானா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து முதன்மை நிர்வாக அலுவலர் ராமசாமி பேசினர். ஏற்பாடுகளை தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யா, வட்டார பணியாளர்கள் கவிதா, கலைச்செல்வி, சுமித்ரா, சித்ரா, அனுஷா, பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us