ADDED : ஜூலை 29, 2024 12:30 AM

தேனி : தேனியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் குருபூஜை விழா நடந்தது.
தமிழ்நாடு அனைத்து சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை துணைத் தலைவர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். இதிகாச சங்கலன சமிதி மாநில அமைப்புப் செயலாளர் கதிரவன் பேசினார். விழாவில் சமுதாயத்திற்கு சேவை மனப்பான்மையுடன் உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விழாவில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மகேந்திரன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.