/உள்ளூர் செய்திகள்/தேனி/ மன அழுத்தத்திலிருந்து விடுபட போலீசாருக்கு யோகா பயிற்சி மன அழுத்தத்திலிருந்து விடுபட போலீசாருக்கு யோகா பயிற்சி
மன அழுத்தத்திலிருந்து விடுபட போலீசாருக்கு யோகா பயிற்சி
மன அழுத்தத்திலிருந்து விடுபட போலீசாருக்கு யோகா பயிற்சி
மன அழுத்தத்திலிருந்து விடுபட போலீசாருக்கு யோகா பயிற்சி
ADDED : ஜூலை 29, 2024 12:29 AM

கம்பம்: மன அழுத்தமே இதய நோய்கள் வர முக்கிய காரணமாகும்.
ஒவ்வொரு அரசு துறையில் பணியாற்றுபவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதில் போலீஸ் துறை முதலிடம் பெறுகிறது. எனவே போலீசாருக்கு யோகா பயிற்சி தர உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக கம்பத்தில் உள்ள இரண்டு போலீஸ் ஸ்டேசன்களிலும் பணியாற்றும் போலீசார், எஸ்.ஐ.,க்களுக்கு நேற்று காலை யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இங்குள்ள சி.பி.யூ. மேல்நிலைய ப்பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி நடந்தது. யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் மன அமைதி, பதட்டத்திலிருந்து விடுபடுவது எப்படி என விளக்கி கூறப்பட்டது. புஜங்காசனம், வஜ்ராசனம், ஒட்டகாசனம், மூச்சு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.