/உள்ளூர் செய்திகள்/தேனி/ காற்றால் துாய்மையாகும் வைகை 'பிக்கப் அணை' காற்றால் துாய்மையாகும் வைகை 'பிக்கப் அணை'
காற்றால் துாய்மையாகும் வைகை 'பிக்கப் அணை'
காற்றால் துாய்மையாகும் வைகை 'பிக்கப் அணை'
காற்றால் துாய்மையாகும் வைகை 'பிக்கப் அணை'
ADDED : ஜூன் 08, 2024 05:46 AM

ஆண்டிபட்டி : கடந்த சில நாட்களாக வீசும் தென்மேற்கு பருவக்காற்றால் வைகை பிக்கப் அணை நீர்த் தேக்கத்தின் மேற்பரப்பில் இருந்த செடி கொடிகள், இலைகள் கரைப்பகுதியில் ஒதுங்கி, தேங்கிய நீர் தூய்மையாக காட்சியளிக்கிறது.
வைகை அணையில் திறக்கப்படும் நீர் தரைப்பாலம், பெரிய பாலம் வழியாக பிக்கப் அணையில் தேங்குகிறது.
பின் அங்கிருந்து ஆற்றின் வழியாகவும் கால்வாய் வழியாகவும் பாசனம் மற்றும் குடிநீருக்கு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தேவைக்கு தக்கபடி வெளியேற்றப்படும். மே 10 முதல் 28 வரை வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்ட போது பிக்கப் அணையில் வளர்ந்திருந்த ஆகாய தாமரை செடிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
நீர் திறப்பு முடிந்த பின் மீண்டும் நீர்த்தேக்கத்தில் இலை, தழைகள் மிதந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீசும் தென்மேற்கு பருவக்காற்றால் பிக்கப் அணை நீரில் மிதந்த இலை தலைகள் காற்றின் வேகத்தால் ஒதுங்கி தேங்கிய நீர் தூய்மையாக காட்சியளிக்கிறது.