/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஏல ஆக்சன் மையங்களில் மறு பதிவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு ஏல ஆக்சன் மையங்களில் மறு பதிவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு
ஏல ஆக்சன் மையங்களில் மறு பதிவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு
ஏல ஆக்சன் மையங்களில் மறு பதிவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு
ஏல ஆக்சன் மையங்களில் மறு பதிவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு
ADDED : ஜூன் 08, 2024 05:46 AM
கம்பம்: ஏல ஆக்சன் மையங்களில் ஏலக்காய் மறு பதிவை தடுக்க ஏல நிறுவனங்கள் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்பைசஸ் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடியாகும் ஏலக்காயை போடி மற்றும் புத்தடியில் உள்ள ஸ்பைசஸ் வாரியத்தின் இ ஆக்சன் மையங்களில் ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். வாரியத்தின் லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் ஏலத்தை நடத்துகின்றன.. வாரியத்திடம் அனுமதி பெற்ற வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அந்த ஏலக்காய்களை மற்றொரு ஆக்சனில் பதிவு செய்து, லாபம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் கேரள ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில், ஒவ்வொரு ஆக்சனிலும் பதிவு செய்யப்படும் ஏலக்காய் அளவில், 25 சதவீதம் அளவிற்கு வியாபாரிகள் பதிவு செய்து கொள்ளலாம் என்று வாரியம் அனுமதி வழங்கியது.
தற்போது மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒரு ஆக்சனில் கொள்முதல் செய்த காயை இன்னொரு ஆக்சனில் பதிவு பண்ண கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி சிறு வியாபாரிகள் கூறுகையில், சி.ஆர். ( கார்டமம் ரிஜிஸ்திரேசன் ) சான்றிதழ் இல்லாத சிறு விவசாயிகள் நேரடியாகவோ அல்லது ஆக்சன் நிறுவனங்கள் மூலமாகவோ ஆக்சனில் பதிவு செய்ய முடியாது. வாரியத்தின் இந்த உத்தரவு சிறு குறு விவசாயிகளை பாதிக்கும்.
சிறு வியாபாரிகள் கொள்முதலை சிறு விவசாயிகளிடம் குறைக்க வேண்டிய நிலை வரும். இது சிறு குறு விவசாயிகளை பாதிக்கும் என்கின்றனர்.