ADDED : ஜூன் 21, 2024 04:57 AM
ஆண்டிபட்டி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை சேர்ந்தவர் நிஷாந்த் 28, தனது மனைவி மற்றும் குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உடனிருந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூன் 16ல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. நிஷாந்த் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.