/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடுக்கியில் பருவ மழை தீவிரம் மூன்று நாட்கள் ' எல்லோ அலர்ட்' இடுக்கியில் பருவ மழை தீவிரம் மூன்று நாட்கள் ' எல்லோ அலர்ட்'
இடுக்கியில் பருவ மழை தீவிரம் மூன்று நாட்கள் ' எல்லோ அலர்ட்'
இடுக்கியில் பருவ மழை தீவிரம் மூன்று நாட்கள் ' எல்லோ அலர்ட்'
இடுக்கியில் பருவ மழை தீவிரம் மூன்று நாட்கள் ' எல்லோ அலர்ட்'
ADDED : ஜூன் 21, 2024 04:57 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் வலுவடைந்ததால் இன்று (ஜூன் 21) முதல் மூன்று நாட்களுக்கு ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மே 30ல் துவங்கியது.
ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் பலத்த மழை பெய்த நிலையில், அதன் பிறகு வலுவிழந்தது. ஜூன் 18 முதல் மீண்டும் மழை வலுவடைந்தது.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் மழை தொடர்வதால் இன்று (ஜூன் 21) முதல் மூன்று நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுத்தது.
நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரி மழை 20.34 மி.மீ., பதிவானது. மிகவும் கூடுதலாக உடும்பன்சோலை தாலுகாவில் 72 மி.மீ., மழை பதிவானது. தாலுகா வாரியாக பதிவான மழை அளவு (மி.மீட்டரில்)
தேவிகுளம் 24.4, உடும்பன்சோலை 72, பீர்மேடு 12.5, இடுக்கி 33.2, தொடுபுழா 24.4.
குறைவு:மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணக்குப்படி ஜூன் ஒன்று முதல் ஜூன் 20 வரை 428.2 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.
இந்தாண்டு அதே கால அளவில் 179.4 மி.மீ., மழை பெய்தது.
இது 58 சதவிகிதம் குறைவாகும். அதேபோல் கோடை மழையும் 19 சதவிகிதம் குறைவாக பதிவானது.