/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தியும் மன்ற கூட்டம் நடத்த ஆர்வமில்லை தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தியும் மன்ற கூட்டம் நடத்த ஆர்வமில்லை
தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தியும் மன்ற கூட்டம் நடத்த ஆர்வமில்லை
தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தியும் மன்ற கூட்டம் நடத்த ஆர்வமில்லை
தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தியும் மன்ற கூட்டம் நடத்த ஆர்வமில்லை
ADDED : ஜூன் 19, 2024 04:57 AM
கம்பம், : தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தியும் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் முன்னிலையில் மாதந்தோறும் கவுன்சில் கூட்டங்கள் நடத்தி, வரவு செலவு மற்றும் இதர வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக் மன்றம் ஒப்புதல் பெற வேண்டும். நகராட்சி, பேரூராட்சி கூட்ட ஒப்புதல் இல்லாத செலவினங்கள் மற்றும் இதர பணிகள் அங்கீகாரமற்றதாகி விடும். எனவே மாதந்தோறும் கவுன்சில் கூட்டங்களை நடத்தி கமிஷனர், பொறியாளர் டைரிகளுக்கு அப்ரூவல், செலவினங்களுக்கு அனுமதி, கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கும் அனுமதி பெற வேண்டும்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக கவுன்சில் கூட்டங்கள் நடத்தவில்லை.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தி 10 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் கம்பம், சின்னமனூர் நகராட்சிகளில் இன்னமும் கவுன்சில் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கான அனுமதி பெற வேண்டிய பொருள்கள் நூற்றுக் கணக்கில் நிலுவையில் உள்ளது.
கூட்டங்கள் நடத்தி 90 நாட்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக கவுன்சில் கூட்டங்களை நடத்திட சம்பந்தப்பட்ட கமிஷனர்கள், தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.