/உள்ளூர் செய்திகள்/தேனி/ மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை
மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை
மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை
மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை
ADDED : ஜூன் 19, 2024 04:58 AM
கம்பம், : கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்யவில்லை. இதனால் வெயில் தாக்கம் அதிகரித்தது. மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு, மகாராசாமெட்டு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வானம் மேக மூட்டமாக இருந்தது.
நேற்று காலை முதல் மழை தொடர்வதால் ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண் ணியாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுருளியாறு மின் நிலையத்தில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.நேற்று காலை 10 மணிக்கு கம்பத்தில் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து 15 நிமிடங்கள் பெய்த மழை பின் நின்று விட்டது. ஆனால் வெயில் குறைந்து வானம் மேக மூட்டமாக உள்ளது. பெரியகுளம் பகுதியில் மதியம் ஒரு மணிக்கு சிறிது நேரம் மழை பெய்து பின் வெயில் அதிகரித்தது.