/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓட்டு வித்தியாச சாதனையை தக்கவைத்த தேனி அ.தி.மு.க., ஓட்டு வித்தியாச சாதனையை தக்கவைத்த தேனி அ.தி.மு.க.,
ஓட்டு வித்தியாச சாதனையை தக்கவைத்த தேனி அ.தி.மு.க.,
ஓட்டு வித்தியாச சாதனையை தக்கவைத்த தேனி அ.தி.மு.க.,
ஓட்டு வித்தியாச சாதனையை தக்கவைத்த தேனி அ.தி.மு.க.,
ADDED : ஜூன் 06, 2024 10:44 PM
கம்பம்:தேனி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டு வித்தியாச சாதனை இந்த தேர்தலிலும் முறியடிக்கப்படவில்லை.
தேனி லோக்சபா தொகுதியில் இதற்கு முன் நடைபெற்ற 9 தேர்தல்களில் அ.தி.மு.க., ஆறு முறையும், தி.மு.க. ஒருமுறையும், தி.மு.க., கூட்டணியில் காங்., இருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவிய போதும் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். இதுவரை நடந்த 9 தேர்தல்களில் 2014 ல் வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் பார்த்திபன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பொன் முத்துராமலிங்கத்தை 3,14,532 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்த சாதனை இதுவரை முறியடிக்க வில்லை. நடந்து முடிந்த தேர்தலில் தங்க தமிழ்செல்வன் 2,78,824 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பெற்ற ஓட்டுகளில் தங்கதமிழ்செல்வன்( 5,71,493) முதலிடத்தில் உள்ளார். பார்த்திபன் 5,71,264 ஓட்டுகள் பெற்றிருந்தார். பார்த்திபன் பெற்ற ஓட்டுக்களை விட 229 ஓட்டுக்கள் அதிகம்.