/உள்ளூர் செய்திகள்/தேனி/ தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல் தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்
தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்
தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்
தரமில்லாமல் உணவு தயாரித்த 102 கடைகளுக்கு ரூ.16.23 லட்சம் அபராதம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்

உணவு பாதுகாப்ப அலுவலர்கள் பணி என்ன பொதுமக்களுக்கு தரமான, கலப்படம் இல்லாத உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது. உணவு தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு செய்தல். சுகாதாரம் பின்பற்றாத, தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு தரநிர்ணய சட்டம் 2006, விதிகள் 2011ன்படி நடவடிக்கை மேற்கொள்வது முக்கிய பணி ஆகும். உணவுகளில் அதிக செயற்கை நிறமி பயன்பாடு உள்ளதே
பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்கள், சிக்கன் உள்ளிட்ட மாமிச உணவுப் பொருட்களில் செயற்கை நிறமி பயன்படுத்த அனுமதி இல்லை. பேக்கரிகளில் மட்டும் குறிப்பிட்ட அளவு செயற்கை நிறமி பயன்படுத்தலாம். அதிலும் அதிக அளவில் நிறமி சேர்க்கப்படுகிறதா என ஆய்வுகள் செய்யப்படுகிறது. நிறமி அதிக அளவில் இருந்தால் அந்த வகை உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்கிறோம். விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
உணவு தயாரிப்போர், விற்பனை செய்வோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறதா உணவு தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி உணவு தயாரிப்போர், கடைகளில் விற்பனையில் ஈடுபடுவோருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சிறுகுறு வியாபாரிகள், ரோட்டோர வியாபாரிகள், ஓட்டல் பணியாளர்கள், கோயில் களில் உணவுத் தயாரிப்போர், பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், சத்துணவுத்திட்ட பணியா ளர்களுக்கும் பயிற்சிகள் வழங்குகின்றோம். கடந்தாண்டு மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1500 இடங்களில் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 7ஆயிரம் பேர் பயிற்சி பெற்றனர். சுகாதாரத்தை பின்பற்றும் கடைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறதா மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் உணவுத்தரம், சுகாதாரத்தை பின்பற்றுவதை வாடிக்கையாளர்கள் மதிப்பெண் அளிக்கும் வகையில் 'ஹைஜீன்' சான்றிதழ்கள் வழங்குகிறோம். இதுவரை 2500 கடைகளுக்கு இச்சான்றிதழ் வழங்கி உள்ளோம். இதில் ஒன்று முதல் 5 வரை ஸ்டார் அளிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. எந்த கடைகளில் 3 ஸ்டார்களுக்கு குறைவாக வருகிறதோ, அந்த கடையில் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை 30 நாட்களில் நிவர்த்தி செய்ய அறிவுறுத்துகிறோம். பின்பற்றாத கடைகளுக்கு அபராதம், தொடர்ந்து சீல்வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 14 கோயில்களுக்கும் சுகாதரத்தை பின்பற்றுகின்றனவா என ஆய்வு செய்து ஓராண்டிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் மீது நடவடிக்கை
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுகிறா என தொடர் ஆய்வுகள் செய்து வருகிறோம். ஓராண்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 258 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள 948 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கடைகளுக்கு ரூ. 36.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி அருகில் செயல்பட்ட 60 கடைகளில் இருந்து 121 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் புகையிலை பயன்பாட்டை தடுப்பதுபற்றி
கலெக்டர் உத்தரவில் இந்தாண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்கின்றனர். புகையிலை பயன்படுத்தும் மாணவர்களின் பற்களில் கரை படிந்தும், அதன் துகள்கள் ஒட்டி இருக்கும். இம்மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தனியாக 'கவுன்சிலிங்' வழங்கப்பட உள்ளது. அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மோக் பிஸ்கட், ஷவர்மா விற்பனை உள்ளதா
மாவட்டத்தில் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்ப்படுவதில்லை. அதே போல் சில கடைகளில் மட்டும் ஷவர்மா விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தரமான சிக்கன், பிற மூலப்பொருட்கள் பயன்படுத்த கடைகாரர்களை அறிவுறுத்தி வருகி ஆய்வுகள் செய்யபடுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கிறதே
உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் நடந்த ஆய்வுகளில் கடந்த ஓராண்டில் 672 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்தவர்களுக்கு ரூ.3.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 168 கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.