/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாதந்தோறும் வருமான வரி பிடித்தத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஜூன் 13ல் கருவூலங்கள் முன் நடக்கிறது மாதந்தோறும் வருமான வரி பிடித்தத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஜூன் 13ல் கருவூலங்கள் முன் நடக்கிறது
மாதந்தோறும் வருமான வரி பிடித்தத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஜூன் 13ல் கருவூலங்கள் முன் நடக்கிறது
மாதந்தோறும் வருமான வரி பிடித்தத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஜூன் 13ல் கருவூலங்கள் முன் நடக்கிறது
மாதந்தோறும் வருமான வரி பிடித்தத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஜூன் 13ல் கருவூலங்கள் முன் நடக்கிறது
ADDED : ஜூன் 06, 2024 08:01 PM
தேனி:மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்வதை கண்டித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் மாவட்ட கருவூலங்கள் முன் ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
ஆரம்பப்பள்ளி பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தேனி மாவட்ட தலைவர் செல்லத்துரை கூறியதாவது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2021 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதில் கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ள தனியார் இன்சுரன்ஸ் நிறுவனம், அரசாணையை மதிப்பதில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிகிச்சை கட்டணத்தில் 20 முதல் 40 சதவீதம் மட்டும் அனுமதிக்கின்றன. அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் சம்பளத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., ல் மாதந்தோறும் வருமான வரிபிடித்தம் செய்யும் முறையை கைவிட வேண்டும்.
பழைய நடைமுறைப்படி வருமான வரி செலுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட கருவூலங்கள் முன் ஜூன் 13 மாலை 5:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனம் முன் ஜூலை 17 ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.