/உள்ளூர் செய்திகள்/தேனி/ கொலை வழக்கு வாபஸ் பெற கூறி மிரட்டியவர் கைது கொலை வழக்கு வாபஸ் பெற கூறி மிரட்டியவர் கைது
கொலை வழக்கு வாபஸ் பெற கூறி மிரட்டியவர் கைது
கொலை வழக்கு வாபஸ் பெற கூறி மிரட்டியவர் கைது
கொலை வழக்கு வாபஸ் பெற கூறி மிரட்டியவர் கைது
ADDED : ஜூலை 14, 2024 04:07 AM
தேவதானப்பட்டி, : குள்ளப்புரத்தில் கொலை வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி காளீஸ்வரி 30.
இவரது அண்ணன் முத்துமாரி என்பவரை சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகன் விஜய் 35.
கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை பெரியகுளம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காளீஸ்வரியின் தாயார் மருதாயிடம், கொலை வழக்கை வாபஸ் பெறக்கோரி மதுரைவீரன் அவதூறாக பேசி பிரச்னை செய்துள்ளார்.
இதனை தட்டி கேட்ட காளீஸ்வரியை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், மதுரை வீரனை கைது செய்தார்.