ADDED : ஜூலை 14, 2024 04:08 AM
திருமங்கலம், : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிராஜ் 49. இவரது மனைவி சாந்தி 45.
நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, டூவீலரில் திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் சென்றனர். ஆஸ்டின்பட்டி சந்திப்பு அருகே டூவீலரில் வந்த இருவர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின் உட்பட ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். கீழே விழுந்ததில் சாந்தி, ஜோதிராஜ் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.