/உள்ளூர் செய்திகள்/தேனி/ பழச்செடிகள் தொகுப்பிற்கு எதிர்பார்ப்பு தோட்டக்கலைத்துறை மவுனம் பழச்செடிகள் தொகுப்பிற்கு எதிர்பார்ப்பு தோட்டக்கலைத்துறை மவுனம்
பழச்செடிகள் தொகுப்பிற்கு எதிர்பார்ப்பு தோட்டக்கலைத்துறை மவுனம்
பழச்செடிகள் தொகுப்பிற்கு எதிர்பார்ப்பு தோட்டக்கலைத்துறை மவுனம்
பழச்செடிகள் தொகுப்பிற்கு எதிர்பார்ப்பு தோட்டக்கலைத்துறை மவுனம்
ADDED : ஜூன் 20, 2024 05:11 AM
சின்னமனூர்: காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்க பழச்செடி தொகுப்பு எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பழம் மற்றும் காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பழச்செடிகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க பழச்செடி தொகுப்பு கடந்தாண்டு வழங்கப்பட்டது.
இந்த தொகுப்பில் மா, எலுமிச்சை, கொய்யா, பெருநெல்லி, சீத்தா செடிகள் இருந்தது. ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.150 என்றும், விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.112.50 பைசா போக ரூ.37.50 செலுத்தி வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்து வழங்கினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 3 ஊராட்சிகளுக்கு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 300 தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்து, சின்னமனூர் வட்டாரத்தில் எரசக்க நாயக்கனுார், பொட்டிப்புரம், கன்னிசேர்வை பட்டி ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் 24 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் 300 பழச் செடி தொகுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு இதுவரை அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
பழச்செடிகள் தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.