யோகா தினம் பிரம்ம குமாரிகள் ஊர்வலம்
யோகா தினம் பிரம்ம குமாரிகள் ஊர்வலம்
யோகா தினம் பிரம்ம குமாரிகள் ஊர்வலம்
ADDED : ஜூன் 20, 2024 05:10 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் பிரஜாபதி பிரம்ம குமாரிகள் ராஜ யோக தியான மையத்தின் சார்பில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சர்வதேச யோகா தினம் நாளை ( ஜுன் 21 ) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டியும், யோகாவின் மகத்வத்தை விளக்க வேண்டியும் கம்பம் பிரஜாபதி பிரம்ம குமாரிகள் ராஜ யோக தியான மையத்தின் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தெற்கு ரத வீதி கர்ணம் வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் தேரடி, வடக்கு ரத வீதி, மெயின்ரோடு வழியாக ராஜயோக தியான மையத்தை சென்றடைந்தது. பின்னர் தியானம், கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.