/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவி பூதநாராயணர் கோயில் பாலாலயம், திருப்பணிகள் துவக்கம் சுருளி அருவி பூதநாராயணர் கோயில் பாலாலயம், திருப்பணிகள் துவக்கம்
சுருளி அருவி பூதநாராயணர் கோயில் பாலாலயம், திருப்பணிகள் துவக்கம்
சுருளி அருவி பூதநாராயணர் கோயில் பாலாலயம், திருப்பணிகள் துவக்கம்
சுருளி அருவி பூதநாராயணர் கோயில் பாலாலயம், திருப்பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 05:11 AM
கம்பம்: சுருளி அருவியில் பிரசித்தி பெற்ற பூதநாராயணர் கோயில் பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து திருப்பணி துவங்குகிறது.
பூதநாராயணர் கோயிலில் ஒரே கருவறையில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ள ஸ்தலமாகும்.
தேவர்களை, அரக்கர்கள் அழிக்க முற்பட்ட போது, தேவர்களை சுருளிமலையில் மறைத்து வைத்து, அவர்களுக்கு பூதமாக நின்று காவல் காத்தனர் என்றும், எனவே பூதநாராயணராக இத்தலத்தில் எழுந்தருளியுள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ஆன்மா சாந்தி பெற, இக் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது இன்றைக்கும் பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இக் கோயிலில் 2004 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய பரம்பரை அறங்காவலர்களும், ஹிந்து அறநிலைய துறை முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விஸ்வசேனா ஆராதனை, எஜமான சங்கல்பம், விமான கலா கர்சனம், யாகசாலை பிரவேசம், கலச திருமஞ்சனம், தீபாரா தனை நடைபெற்றது.
நேற்று காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம், மூலவர் சகஸ்ரநாம அர்ச்சனை, இரண்டாம் கால வேதிகா அர்ச்சனை, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு செய்து பாலாலயம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். கூடலூர் கூடல் அழகிய பெருமாள் கோயில் அர்ச்சகர் குணசீலன் பாலாலயத்தை நடத்தினார்.
மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், சுருளிப்பட்டி சிவனேசன், வாசகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பூஜாரிகள் செய்திருந்தனர்.
திருப்பணிகள் முடிந்த பின் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.