/உள்ளூர் செய்திகள்/தேனி/ 640 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு 640 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு
640 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு
640 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு
640 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு
ADDED : ஜூன் 22, 2024 05:44 AM
தேனி: மாவட்டத்தில் 2018-2019 ஆண்டு முதல் வேளாண் துறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆண்டிப்பட்டியில் 85 எக்டேர், போடியில் 80,சின்னமனுாரில் 90, கம்பத்தில் 80, கடமலைகுண்டு மயிலாடும்பாறையில் 80, பெரியகுளத்தில் 70, தேனியில் 70, உத்தமபாளையத்தில் 85 எக்டேர் என 640 எக்டேரில் ரூ. 7 கோடி செலவில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சம் விவசாயிகள் 5 எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
சிறு குறுவிவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.வேளாண் துறை மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயனடைந்து 7 ஆண்டுகளை கடந்த விவசாயிகளும் மீண்டும் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்விரிவாக்க மையங்களை அணுகலாம் எனதெரிவித்துள்ளனர்.