/உள்ளூர் செய்திகள்/தேனி/ போடி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை துவக்கம் போடி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை துவக்கம்
போடி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை துவக்கம்
போடி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை துவக்கம்
போடி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை துவக்கம்
ADDED : ஜூன் 22, 2024 05:44 AM
தேனி: போடி தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் சேவைகள் அனைத்து வார நாட்களிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடந்து வருகிறது. மத்திய அரசு விடுமுறை நாட்களில் இச்சேவை நடைபெறாது.
மக்கள் இதற்கான முன் பதிவினை அனைத்து தலைமை, துணை தபால் அலுவலகங்களில் சி.எஸ்.சி., (பொது சேவை மையங்கள்) மூலம் பதிவு செய்து, இச் சேவையினை பயன்படுத்தி பயன் பெறலாம் என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.