/உள்ளூர் செய்திகள்/தேனி/ மலைக்கிராமத்திற்கு ரூ.20 லட்சத்தில் தார் ரோடு மலைக்கிராமத்திற்கு ரூ.20 லட்சத்தில் தார் ரோடு
மலைக்கிராமத்திற்கு ரூ.20 லட்சத்தில் தார் ரோடு
மலைக்கிராமத்திற்கு ரூ.20 லட்சத்தில் தார் ரோடு
மலைக்கிராமத்திற்கு ரூ.20 லட்சத்தில் தார் ரோடு
ADDED : ஜூன் 02, 2024 04:11 AM
கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் குமணன்தொழு ஊராட்சிக்குட்பட்ட வனத்தாய்புரம் கிராமத்தில் வெம்பூர் முதல் பொம்மிநாதபுரம் வரை உள்ள மலைக்கிராம ரோடு கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்தது.
அப்பகுதி விளை நிலங்களுக்கு செல்ல விவசாயிகள் சிரமப்பட்டனர். தென்னை, முருங்கை, தக்காளி உள்ளிட்ட விளை பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. புதிய தார் ரோடு அமைக்க அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சரின் கிராம ரோடு விரிவாக்க திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் தரம் குறித்து ஒன்றிய பொறியாளர் ராமமூர்த்தி, தொழில்நுட்ப உதவியாளர்கள் அழகுராஜா, சாய்பிரகாஷ், ஜெயபாண்டி, ராஜேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.