ADDED : ஜூன் 02, 2024 04:11 AM
போடி: போடி அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் 40., முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ் 40. இவர்கள் இருவரும் விற்பனை செய்வதற்காக டூவீலரில் 30 மது பாட்டில்களை போடிக்கு கடத்தி வந்துள்ளனர்.
போடி நந்தனம் தெருவை சேர்ந்த பிச்சைமணி 47,விற்பனை செய்வதற்காக 13 மதுபாட்டில்கள், போடி சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்த பாண்டி 70, விற்பனை செய்வதற்காக 9 மது பாட்டில்கள் பதுக்கி வைத்துள்ளனர்.
போடி டவுன் போலீசார் சிவக்குமார், சதீஷ் உட்பட 4 பேரை கைது செய்து52 மது பாட்டில் டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.