ADDED : ஜூன் 02, 2024 04:12 AM
பெரியகுளம்: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லோக்சபா தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. நேற்று பெரியகுளம் பாலசுப்பிரணியர் கோயிலில் பன்னீர் செல்வம் தனது வெற்றிக்கும், பா.ஜ., மற்றும் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாம் முறையாக பிரதமராக மோடி வரவேண்டும் என பூஜை செய்தார்.
கவுமாரியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.