/உள்ளூர் செய்திகள்/தேனி/ பு ரவு காவல் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை தேவை பு ரவு காவல் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை தேவை
பு ரவு காவல் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை தேவை
பு ரவு காவல் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை தேவை
பு ரவு காவல் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 02, 2024 04:04 AM
கம்பம்: காமயகவுண்டன்பட்டியில் பரவு காவல் இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் பரவு காவல் அலுவலக இடம் உள்ளது. இந்த இடத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என மற்றொரு சமூகத்தினர் கூறி, இடத்தை தருமாறு கேட்கின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து பேசிய உத்தமபாளையம் ஆர்.டி. ஒ தாட்சாயினி, தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் இருதரப்பினரும் பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளார். தற்போது பரவு காவல் கட்டடம் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய் ஆவணங்களில் தங்களுக்கு சொந்தமானது என்று பதிவு இருப்பதாக ஒரு சமூகத்தினரும், இடத்திற்குரிய வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தங்கள் பெயரில் உள்ளது என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்படாமல் சுமூகமான முடிவை எடுக்க அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.