/உள்ளூர் செய்திகள்/தேனி/ விவசாய சங்கம் சார்பில் 11 கி.மீ. சின்ன வாய்க்கால் பராமரிப்பு விவசாய சங்கம் சார்பில் 11 கி.மீ. சின்ன வாய்க்கால் பராமரிப்பு
விவசாய சங்கம் சார்பில் 11 கி.மீ. சின்ன வாய்க்கால் பராமரிப்பு
விவசாய சங்கம் சார்பில் 11 கி.மீ. சின்ன வாய்க்கால் பராமரிப்பு
விவசாய சங்கம் சார்பில் 11 கி.மீ. சின்ன வாய்க்கால் பராமரிப்பு
ADDED : ஜூன் 02, 2024 04:04 AM
கம்பம்: 11 கி.மீ. நீளம் கொண்ட கம்பம் சின்ன வாய்க்கால் பராமரிப்பு பணிகளை விவசாய சங்கத்தினர் மேற்கொண்டனர்.
கம்பம் பள்ளதாத்தில் 14,707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தில் நடைபெறும் இந்த சாகுபடிக்கு தண்ணீர் வினியோகம் 17 வாய்க்கால்கள் மூலம் நடைபெறுகிறது.
வாய்க்கால் பராமரிப்பில் பொதுப்பணித் துறை கவனம் செலுத்தாததால் கரைகள் பலமிழந்தும், செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, நீரை முழுமையாக பயன்படுத்த முடியாது. பொதுப்பணித்துறை பராமரிப்பு பணி செய்யவில்லை. இதனால் விவசாய சங்கங்களே வாய்க்கால் பராமரிப்பை செய்து கொள்கிறது.
கருநாக்கமுத்தன் பட்டியில் துவங்கும் கம்பம் சின்ன வாய்க்கால் சாமாண்டிபுரம், கம்பம் வழியாக உத்தமபாளையம் செல்கிறது.
சுமார் 11 கி.மீ. நீளத்திற்கு இந்த கண்மாய் பராமரிப்பு பணிகளை கம்பம் விவசாய சங்கம் மேற்கொண்டு வருகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு பணிகளை முடிக்க விவசாய சங்கத்தினர் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.